சிலம்பம் சுற்றும் 'தங்கலான்' பட நடிகை வீடியோ
|‘தங்கலான்’ பட நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பாட்டம் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
'பேட்ட' படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதன் பிறகு தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் தனுஷின் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காலக்கட்டப் படமான 'தங்கலான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தில் மாளவிகாவுக்கு ஹீரோவோடு சேர்ந்து இவருக்கும் ஆக்சன் காட்சிகள் இருக்கிறது என்பதால் சிலம்பம் சுற்றக் கற்றுக் கொண்டார். சிலம்பத்திற்காக பயிற்சி எடுக்கும் வீடியோக்களை அவ்வப்போது இணையதளத்தில் பகிர்ந்து வந்தார் மாளவிகா.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடை அணிந்து கட்டிட மொட்டைமாடியில் சிலம்பாட்டம் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இப்போது படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சிலம்பம் சுற்றும் பயிற்சியை அவர் கைவிடவில்லை. தனது பக்கத்து வீட்டுத் தோழியுடன் அப்பார்ட்மெண்ட் மாடியில் சிலம்பம் சுற்றியிருக்கிறார் மாளவிகா.
இந்தப் புகைப்படங்களை பகிர்ந்திருப்பவர், 'சிலம்பம் சுற்ற இப்படி ஒரு தோழி கிடைப்பது சூப்பர்!' எனப் பதிவிட்டுள்ளார். இவரிடம் ரசிகர்கள் கமெண்ட்டில் 'தங்கலான்' படம் எப்போது ரிலீஸ் எனக் கேட்டு வருகின்றனர்.