< Back
சினிமா செய்திகள்
லண்டனில் மாளவிகா மோகனன்: புகைப்படங்கள் வைரல்..!
சினிமா செய்திகள்

லண்டனில் மாளவிகா மோகனன்: புகைப்படங்கள் வைரல்..!

தினத்தந்தி
|
9 Oct 2023 9:22 PM IST

“ஹலோ லண்டன்” எனக்குறிப்பிட்டு நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சென்னை,

தமிழில் ரஜினிகாந்துடன் 'பேட்ட', விஜய்யுடன் 'மாஸ்டர்', தனுசின் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விக்ரம் ஜோடியாக 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தநிலையில் பயணம் செய்வதில் ஆர்வமுடைய மாளவிகா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் "ஹலோ லண்டன்" எனக்குறிப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் மாளவிகா மோகனன்.

மேலும் செய்திகள்