தங்கலான் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சிவப்பு நிற ஆடையில் வரும் மாளவிகா மோகனன்...காரணம் என்ன தெரியுமா?
|ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று "தங்கலான்" திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது.
சென்னை,
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் உருவெடுத்தார். அந்த வரிசையில், இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் "தங்கலான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று "தங்கலான்" திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
"தங்கலான்" திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார். இந்த கதாப்பாத்திரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு மெனெக்கட்டுள்ளார் மாளவிகா. இதற்காக சிலம்பம் பயிற்சி முதல் உடல் எடை குறைவது வரை இப்படத்திற்காக செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிகப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது.
அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், தங்கலான் படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் தங்கமாய் ஜொலித்திருந்தார். மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை தங்கலான் படத்தில் பார்க்கலாம். பொதுவாக படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ண ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் வழக்கம் பாலிவுட் திரையுலகில் பின்பற்றப்படுவதுண்டு. அந்த வகையில், மாளவிகா மோகனன் பாலிவுட் பாணியை தற்போது தங்கலான் புரமோஷனில் கொண்டுவந்துள்ளார்.