< Back
சினிமா செய்திகள்
சொந்த குரலில் டப்பிங் பேசிய மாளவிகா மோகனன்... வெளியானது தங்கலான் படத்தின் சூப்பர் அப்டேட்
சினிமா செய்திகள்

சொந்த குரலில் டப்பிங் பேசிய மாளவிகா மோகனன்... வெளியானது தங்கலான் படத்தின் சூப்பர் அப்டேட்

தினத்தந்தி
|
1 Dec 2023 9:24 PM IST

'தங்கலான்' படத்தில் தனது சொந்த குரலில் நடிகை மாளவிகா மோகனன் டப்பிங் பேசியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'தங்கலான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'தங்கலான்' படத்தின் டப்பிங் பணியை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் வசனம் எதுவும் பேசாமல் கத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே இந்த படத்தில் தனக்கு வசனம் எதுவும் இல்லை என்று நடிகர் விக்ரம் தெரிவித்திருந்தார். தற்போது இந்த வீடியோவில் மாளவிகா மோகனன் வசனம் எதுவும் இல்லாமல் கத்துவதால் அவருக்கும் வசனம் கிடையாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்