< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!
சினிமா செய்திகள்

தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

தினத்தந்தி
|
19 March 2023 6:34 AM IST

தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை,

தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.118 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'வாத்தி' திரைப்படம் கடந்த மார்ச் 17-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்