< Back
சினிமா செய்திகள்
டிமாண்டி காலணி 2 படத்தின் மேக்கிங் வீடியோ - படக்குழு வெளியிட்டது
சினிமா செய்திகள்

'டிமாண்டி காலணி 2' படத்தின் மேக்கிங் வீடியோ - படக்குழு வெளியிட்டது

தினத்தந்தி
|
7 July 2023 10:52 PM IST

'டிமாண்டி காலணி 2' படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.

சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்த நிலையில், 'டிமாண்டி காலணி 2' படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதோடு படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Peek into the Journey to DARKNESS!!!

https://t.co/DLkdjJsvVv

Presenting you the exclusive journey of #DemonteColony2.

Ready to #HAUNT you this "SEPTEMBER".#VengeanceOfTheUnholy #DarknessWillRule#2023WillBeDark@AjayGnanamuthu@priya_Bshankar @ActorMuthukumar

— Arulnithi tamilarasu (@arulnithitamil) July 7, 2023 ">Also Read:


மேலும் செய்திகள்