சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் 'சூர்யா 44' படத்தின் அப்டேட்
|சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சென்னை,
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.
இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா நாளை (ஜூலை 23) தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். எனவே சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யா 44 படத்தின் முக்கிய அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.