< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

இயக்குனர் அன்பறிவ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த கமல்

தினத்தந்தி
|
11 May 2024 7:30 PM IST

கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்கும் அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. கமல்ஹாசன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். பல சுவாரசியமான திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். அதைத்தொடர்ந்து மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார், மேலும் இந்தியன் 2, கல்கி 2898 ஏ.டி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்பொழுது கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை இயக்குபவர் பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர். இவர்கள் சமீபத்தில் வந்த லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் போன்ற அனைத்து திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இவரே இயக்கியுள்ளனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பறிவ் மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து KH237 படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்