< Back
சினிமா செய்திகள்
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

Image Courtesy: Instagram/ urstrulymahesh 

சினிமா செய்திகள்

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
14 Nov 2022 4:41 PM IST

கிருஷ்ணா தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கிருஷ்ணா நேற்று நள்ளிரவில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. தற்போது அவர், தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்