24 ஆண்டுகளாக 'ரீமேக்' படங்களில் நடிக்காத மகேஷ்பாபு
|தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் மகேஷ் பாபு. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும், 1999-ம் ஆண்டு வெளியான 'ராஜகுமாருடு' படத்தின் மூலமே கதாநாயகனாக அறிமுகமானார்.
கடந்த 24 வருடங்களாக ஒரு 'ரீமேக்' படத்தில் கூட மகேஷ்பாபு நடித்தது இல்லை. 'ரீமேக்' படத்தில் நடிக்கவும் கூடாது என்ற உறுதியோடு இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"ஒரு படத்தில் ஒரு ஹீரோ செய்ததை, அப்படியே செய்ய நான் விரும்பவில்லை. எனவே தான் 'ரீமேக்' படங்கள் என்றாலே அதனை தவிர்த்து விடுகிறேன். யார் வற்புறுத்தினாலும், எந்த சூழ்நிலையிலும் இந்த முடிவை நான் மாற்றப்போவது கிடையாது.
'ரீமேக்' படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் படப்பிடிப்புக்கு சென்றால், என்ன புதிய விஷயத்தை நாம் செய்துவிட முடியும். என்னதான் 'ரீமேக்'கில் மெனக்கெட்டு நடித்தாலும் சில சமயங்களில் ஒரிஜினல் ஹீரோவை காப்பி அடிக்கிறார் என்ற கருத்துகள் நிச்சயம் எழும். எனவே நான் 'ரிஸ்க்' எடுக்க தயாராக இல்லை''.
இவ்வாறு மகேஷ்பாபு கூறினார்.