< Back
சினிமா செய்திகள்
இந்தி படத்தில் நாயகனாக மஹத்
சினிமா செய்திகள்

இந்தி படத்தில் நாயகனாக மஹத்

தினத்தந்தி
|
30 Oct 2022 8:20 AM IST

அஜித்குமாரின் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த நடிகர் மஹத் ராகவேந்திராவும் ‘டபுள்எக்ஸ்எல்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார்.

தென் இந்திய நடிகர்-நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர். இந்த வரிசையில் தமிழில் அஜித்குமாரின் 'மங்காத்தா' படத்திலும், 'பிரியாணி' 'சென்னை-28' இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமான மஹத் ராகவேந்திராவும் 'டபுள்எக்ஸ்எல்' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ஜாகீர் இக்பால் இன்னொரு நாயகனாக வருகிறார். ஹீமா குரேஷி, சோனாக்சி சின்ஹா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ரம் ரமணி இயக்குகிறார். மஹத் ராகவேந்திரா கூறும்போது, "தமிழ் படங்களில் 10 வருடங்களாக நடித்து வருகிறேன். எனக்கு நீண்டகாலமாக இந்தி படவாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. ஆனால் இந்த கதை இதயத்தை உருக்கும் அற்புதமான கதையாக இருந்ததால் நடிக்கிறேன். கண்மூடித்தனமாக நம்பும், அழகு எனும் மாயையை கேள்வி கேட்கும் படமாக இது இருக்கும்" என்றார்.

மேலும் செய்திகள்