< Back
சினிமா செய்திகள்
சத்ரபதி சிவாஜி பாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க மராட்டிய ரசிகர்கள் விருப்பம்
சினிமா செய்திகள்

சத்ரபதி சிவாஜி பாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க மராட்டிய ரசிகர்கள் விருப்பம்

தினத்தந்தி
|
3 Jun 2022 4:19 AM IST

கன்னட திரைப்பட நடிகர் யஷ் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்கும் வேண்டும் என்று மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர் நடித்த கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தன. இந்திய திரைஉலமே திரும்பிப்பார்க்கும் வகையில் இவரது படங்கள் வெற்றிபெற்றன.

இந்த நிலையில் மராட்டியர்கள் போற்றும் சத்ரபதி சிவாஜி பாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க வேண்டும் என்றும், அந்த படத்தை பிரபல திரைப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கிட வேண்டும் என்றும் நடிகர் யஷ்சின் மராட்டிய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் நடிகர் யஷ், சத்ரபதி சிவாஜி தோற்றத்தில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் மற்றும் போஸ்டரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அவை தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன.

கர்நாடகத்திற்கு எதிராக செயல்படும் மராட்டியர்களையும், தனது நடிப்பின் மூலம் நடிகர் யஷ் வசீகரித்து விட்டார் என்று கன்னடர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்