< Back
சினிமா செய்திகள்
Maharajas huge success - the film crew gifted a luxury car to the director
சினிமா செய்திகள்

'மகாராஜா' படத்தின் மாபெரும் வெற்றி - இயக்குனருக்கு சொகுசு கார் பரிசளித்த படக்குழு

தினத்தந்தி
|
7 Oct 2024 9:03 AM IST

'மகாராஜா' பட இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு சொகுசு காரை படக்குழு பரிசளித்திருக்கிறது.

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றது . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மறக்க முடியாத மைல் கல்லாக மகாராஜா மாறியது. இந்த வெற்றியைத்தொடர்ந்து ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. அங்கும், மகாராஜா படம் பல சாதனையை படைத்தது.

இந்நிலையில், மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு சொகுசு காரை படக்குழு பரிசளித்திருக்கிறது. இது குறித்த புகைப்படத்தை நித்திலன் சாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்