< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ரூ.100 கோடி வசூலை கடந்த 'மகாராஜா'
|4 July 2024 8:44 AM IST
மகாராஜா திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியானது
சென்னை,
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 'மகாராஜா' திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.