< Back
சினிமா செய்திகள்
விவாகரத்து செய்ய முடிவா? பட அதிபரை மணந்த நடிகை விளக்கம்
சினிமா செய்திகள்

விவாகரத்து செய்ய முடிவா? பட அதிபரை மணந்த நடிகை விளக்கம்

தினத்தந்தி
|
29 May 2023 4:37 PM IST

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும், டி.வி. நடிகை மகாலட்சுமி விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் என்றும் வலைத்தளத்தில் பேசினர். ஆனால் நடிகை மகாலட்சுமி இதனை மறுத்துள்ளார்.

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும், டி.வி. நடிகை மகாலட்சுமியும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானதும் ஜோடி பொருத்தம் பற்றி சிலர் கேலி செய்தார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்தனர்.

சமீபத்தில் ரவீந்தர் சந்திரசேகர் தனியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு அதில், "வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே. ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'' என்ற சோகமான பதிவையும் பகிர்ந்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் சந்திரசேகருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்றும், இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் என்றும் வலைத்தளத்தில் பேசினர். இது பரபரப்பானது..

ஆனால் நடிகை மகாலட்சுமி இதனை மறுத்துள்ளார். அவர் ரவீந்தர் சந்திரசேகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில், "புருஷா...இன்ஸ்டாகிராமில் தனி புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது. நாம் பிரிந்து விட்டோம் என்று அத்தனை சமூக வலைத்தளங்களும் பேசுகின்றன. மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம். யூடியூப் சேனல்களுக்கு எனது மைண்ட் வாய்ஸ். இன்னுமா நாங்க டிரெண்டு. இதுக்கு இல்லையா ஒரு எண்டு. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என்று பதிவிட்டு உள்ளார்.

இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்