தாய்லாந்தில் மடோனா செபஸ்டியன்- புகைப்படங்கள் வைரல்
|தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள மடோனா செபஸ்டியனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாங்காக்,
'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன். அந்த படத்தில் அவரது செலின் கதாபாத்திரம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது.
'காதலும் கடந்து போகும்', 'கவண்', 'ப பாண்டி', 'ஜூங்கா', 'வானம் கொட்டட்டும்', 'கொம்பு வச்ச சிங்கம்டா' போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக அவர் நடித்தது அவரை இன்னும் பிரபலமாகியது.
இதற்கிடையில் மடோனா செபஸ்டியன் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். தாய்லாந்து நகர வீதிகளில் சுற்றித்திரியும் தனது புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விதவிதமான உடைகள் அணிந்தும் ரசிகர்களை அவர் ஈர்த்து வருகிறார்.
ஹோம்லி லுக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த மடோனா செபஸ்டியன், தற்போது படங்களில் கவர்ச்சி காட்டியும் வருகிறார். தற்போது மடோனா செபஸ்டியன் 'அதிர்ஷ்டசாலி' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.