'சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில்... உடையை திறந்தவெளியில் மாற்றும் நிலை' - நடிகை மதுபாலா
|தமிழ் சினிமாவில் நடித்த ஆரம்பகாலத்தில் மலைபகுதிகளிலும், குகைகளிலும் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று நடிகை மதுபாலா கூறினார்.
மும்பை,
தமிழில் அழகன், ரோஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள மதுபாலா இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மதுபாலா அளித்துள்ள பேட்டியில்
" தமிழ் சினிமாவில் நடித்த ஆரம்பகாலத்தில் மலைபகுதிகளிலும், குகைகளிலும், மர நிழல்களிலும் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவையெல்லாம் மிகவும் சங்கடம் ஏற்படுத்துவதாக அமைந்தன.
நடன காட்சிக்காக நாங்கள் அணியும் உடையை திறந்தவெளியில் மாற்றும் நிலையும் ஏற்பட்டது. யாராவது உடை மாற்றுவதை பார்க்கிறார்களா என்றுகூட தெரியாது. இது மிகவும் கடினமான விஷயமாகவே இருந்தது. மணிரத்னத்தின் இருவர் படத்தில் நடித்தபோது, உணவு இடைவேளைக்கு பிறகு பாறையிலேயே தூங்கியுள்ளேன்.
அப்போது, இவ்வளவு பணம் சம்பாதித்து என்ன பயன். பாறையில் படுத்து தூங்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது என யாரோ சொன்னது கூட காதில் விழுந்தது. தற்போது நடிகைகளுக்கு இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருக்கிறது. இந்த மாற்றம் வரவேற்புக்குரியது" இவ்வாறு அவர் கூறினார்.