மனமகிழ்ச்சிக்காக துபாயில் படகு வாங்கியுள்ளேன் - நடிகர் மாதவன்
|படகு ஓட்டும் கேப்டன் உரிமம் பெற்றுள்ளதாகவும், தனது படகில் அடிக்கடி துபாயில் தனியாக பாய்மரப் பயணம் மேற்கொள்வதாகவும் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
நடிகர் மாதவன் , சமீபத்திய நேர்காணலில், தான் வாங்கிய படகு பற்றி பகிர்ந்து கொண்டார். அதில் தனது படகு, கனவு வீட்டிற்கு அடுத்த இடத்தில் இருந்தது என்றார். மேலும் படகு ஓட்டும் கேப்டன் உரிமம் பெறவும், சொந்தமாக படகு வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நனவான பயணத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
"நான் வாங்கிய மிக விலையுயர்ந்த வீடு துபாயில் உள்ளது. இது மிகவும் விலை உயர்ந்தது. மூன்று பேர் கொண்ட குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய வீடு தேவையா? இல்லவே இல்லை. ஆனால் அந்த வீட்டைத் தவிர எனக்குக் கிடைத்த விலை உயர்ந்தது இந்த படகுதான். நான் கேப்டன் லைசென்ஸ் எடுக்க விரும்பியதால் படகை வாங்கினேன், இந்த படகு ஓட்டும் கேப்டன் உரிமம் பெற ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் 40-அடி படகை ஓட்டும் உரிமம் பெற்ற கேப்டனாக இருக்கிறேன்" என்றார்
படகை கடலுக்கு எடுத்துச் சென்று இரவில் அமைதியான சூழ்நிலையில் கதை எழுதுவதாகவும், கதைகளை எழுதும்போது டால்பின்கள் பறந்து செல்வதைப் பார்க்கையில் மனதிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். தனது வாழ்க்கையில் வாங்கியதில் சிறந்தது இந்த படகு என்றும் இது என் மனதிற்க்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்றார்.
தான் திரைவாழ்க்கையில் வெற்றி பெற்றாலும், ஒரு நடிகனாக அதிகம் சம்பாதிக்கவில்லை என்று மாதவன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைத் தரும் படகை வாங்கியதில் பெருமிதம் கொள்கிறார்.
மாதவன் சைத்தான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.