< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் - கங்கனா
|16 March 2024 4:47 AM IST
உளவியல் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் மாதவன்- கங்கனா ரனாவத் நடிக்கின்றனர். உளவியல் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.