ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையில் மாதவன்
|நடிகர் மாதவன் ஏற்கனவே முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரான 'தி ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற படத்தில் நடித்து டைரக்டு செய்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்தியில் 'தோகா ரவுண்ட் தி கார்னர்' படத்தில் நடித்து இருந்தார். மேலும் 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து மாதவன் அடுத்து தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் ஒருவர் கார் முன்பு நிற்பது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது.
இந்த படத்தை கிருஷ்ணகுமார் டைரக்டு செய்கிறார். படத்தில் நடிக்கும் இதர நடிகர் - நடிகைகள் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தயாரிக்கும் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் ஜி.டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன் படத்தை எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.