< Back
சினிமா செய்திகள்
மாதவன், சித்தார்த் நடித்துள்ள டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
சினிமா செய்திகள்

மாதவன், சித்தார்த் நடித்துள்ள 'டெஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

தினத்தந்தி
|
1 Feb 2024 12:52 AM GMT

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் கோடையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'மண்டேலா' படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'டெஸ்ட்'. இந்த படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'டெஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் கோடையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்