சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் 'மெஹந்தி சர்க்கஸ்' ஹீரோ..!
|இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
சென்னை,
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளியான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றது.
இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் 'மெஹந்தி சர்க்கஸ்' போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் என்றும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கதையை கேட்டதிலிருந்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.