< Back
சினிமா செய்திகள்
பாடலாசிரியரான நடிகை சுகன்யா
சினிமா செய்திகள்

பாடலாசிரியரான நடிகை சுகன்யா

தினத்தந்தி
|
2 Sept 2023 12:32 PM IST

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சுகன்யா.

'சின்ன கவுண்டர்', 'திருமதி பழனிசாமி', 'வால்டர் வெற்றிவேல்', 'கேப்டன்', 'மகாநதி', 'இந்தியன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

2019-ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் சுகன்யா நடிக்கவில்லை. நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

இதற்கிடையில் சுகன்யா மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். இப்போது நடிகையாக அல்ல, பாடலாசிரியராக வருகிறார். மலையாளத்தில் 'டி.என்.ஏ.' படத்தில் சுகன்யா பாடல் எழுதியுள்ளார்.

இதுகுறித்து சுகன்யா கூறும்போது, "இத்தனை ஆண்டுகள் கடந்தும் ரசிகர்கள் என்மீது அன்பு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தில் பாடலாசிரியராக வந்துள்ளேன்" என்றார்.

மேலும் செய்திகள்