மாமன்னன் படத்தின் "கொடி பறக்குற காலம்" பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு
|மாரி செல்வராஜின் வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
'மாமன்னன்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள "கொடி பறக்குற காலம்" பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'சிறகுகள் கேட்பது பந்தயத்திற்காக அல்ல பறத்தலுக்காக' என்ற மாரி செல்வராஜின் வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
"நம்ம கொடிப் பறக்கிற காலம் வந்தாச்சு
— Red Giant Movies (@RedGiantMovies_) June 13, 2023
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி"⚡️#KodiParakuraKaalam lyric video is out now ➡️ https://t.co/T5kxfuRSCY@mari_selvaraj @Udhaystalin @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva… pic.twitter.com/DnZhsVstjt