காதலித்தவரையே மணப்பது அதிர்ஷ்டம் - நடிகை கியாரா அத்வானி
|இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கியாரா அத்வானி சமீபத்தில் இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமண அனுபவங்களை கியாரா அத்வானி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''சித்தார்த் மல்கோத்ராவை சில வருடங்களாக காதலித்து சமீபத்தில் மணந்தேன். காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வது அதிர்ஷ்டம்.காதலர்களாக இருப்பது எவ்வளவு சுகமானதோ அந்த காதலை திருமண மேடை வரை கொண்டு செல்லும்போது அந்த மகிழ்ச்சி வேறு லெவலில் இருக்கும். சாதாரண மக்களில் தொடங்கி நடிகர் நடிகைகள் வரை இந்த அனுபவம் ஒன்று தான். திருமண நேரத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். மனதெல்லாம் சொல்ல முடியாத ஆனந்தம் நிறைந்து விட்டது.
எனக்கு திருமணம் நடக்கிறது என்று மனதில் ஒரே கொண்டாட்டம். எனக்கு மட்டுமல்ல காதலித்த அனைத்து ஜோடிகளும் திருமணம் செய்து கொள்ளும்போது இந்த ஆனந்தம் இருக்கும். காதலித்தவரே ஆனாலும் மணமேடையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போதும் அதன் பிறகு தாலி கட்டும் நிகழ்வின்போதும் ஏற்படும் அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அனுபவித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.