< Back
சினிமா செய்திகள்
Lubber Pandhu - Not Dinesh, Harish Kalyan... Do you know who Vijay Sethupathi praised?
சினிமா செய்திகள்

'லப்பர் பந்து'-தினேஷையோ, ஹரிஸ் கல்யாணையோ இல்லை...விஜய் சேதுபதி பாராட்டியது யாரை தெரியுமா?

தினத்தந்தி
|
30 Sept 2024 7:11 AM IST

'லப்பர் பந்து' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'லப்பர் பந்து'. சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த 20-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி லப்பர் பந்து படத்தை பார்த்துவிட்டு, தினேஷையோ, ஹரிஸ் கல்யாணையோ இல்லை, பால சரவணனை நேரில் அழைத்து முத்தமிட்டு பாராட்டி இருக்கிறார். இதனை பால சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்