'என்னை அவர் ஏமாற்றிவிட்டார்' - சன்னிலியோன் பரபரப்பு பேச்சு
|தன் திருமணத்துக்கு முன்பு ஒருவரை காதலித்ததாக சன்னிலியோன் கூறினார்.
மும்பை,
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து சன்னி லியோன் அளித்துள்ள பேட்டியில், ''என் திருமணத்துக்கு முன்பு ஒருவரை காதலித்தேன். இருவரும் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டோம். ஹவாய் தீவில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தோம். இதற்காக ஓட்டல் அறைகள் என்று அனைத்தையும் புக் செய்து பணமும் கட்டிவிட்டேன். ஆனால் என்னை அவர் ஏமாற்றிவிட்டார், ஒரு நாள் உன்னை நான் காதலிக்கவில்லை.
உன்மீது இருந்த காதல் எப்போதோ போய்விட்டது என்றார். அதை கேட்டு என் காலடியில் பூமி நகர்வதுபோல் இருந்தது. இரண்டு மாதத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்து இருந்தபோது இப்படி அவர் பேசியது மனதை மிகவும் பாதித்தது. அதன்பிறகு கடவுள் டேனியல் வெபரை அறிமுகம் செய்தார். எங்களின் இரண்டு மனங்களும் இணைந்ததால் திருமணம் செய்து கொண்டோம்'' என்றார்.