மாரி செல்வராஜ்-க்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்
|மாமன்னன் படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் காரணம் என இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த திரைப்படத்தை பாராட்டினர்.
இந்த நிலையில் மாமன்னன் படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் காரணம் என இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
மாமன்னன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின்னால் உள்ள வலுவான தூண் வேறு யாருமல்ல .ஏ.ஆர்.ரகுமான் சார் தான் . எனது நன்றியை வார்த்தைகளால் கூற முடியாது. இது மனதுக்கு நிறைவான பயணம் . அனைத்து நன்றியும் உங்களுக்கு தான் . இந்த அன்பும் மரியாதையும் என்றும் நிலைத்திருக்கும். என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
நன்றி மாரி செல்வராஜ் . உங்களைப் போன்ற புதிய தலைமுறை இயக்குனர்களுடன் பணிபுரிவதை விரும்புகிறேன், சமூக நீதிக்காக கலைநயத்துடன் செயல்படுபவர்கள், மனித நேயத்தை உயர்த்துகிறார்கள் .உதயநிதி, மற்றும் மாமன்னன் படக்குழுவுக்கு சிறப்பு நன்றி. என பதிவிட்டுள்ளார்.