தோழியை விவாகரத்து செய்தவருடன் காதல்: ஹன்சிகா திருமணத்தில் கிளம்பும் புது தகவல்
|ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோகைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்ற தகவல் வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஹன்சிகா தனது தொழில் பங்குதாரரான சோகைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் திருமணம் 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்க இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சோகைல் கதுரியா பிரான்சின் ஈபிள் டவர் முன்னால் நின்று காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஹன்சிகா வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோகைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்ற தகவல் வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ரிங்கி என்பவரை சோகைல் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் நெருங்கிய தோழி ரிங்கி என்பதால் திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த திருமணத்தில் மணமக்களுடன் இணைந்து ஹன்சிகா நடனம் ஆடிய வீடியோ தற்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.