< Back
சினிமா செய்திகள்
ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் லவ் டுடே திரைப்படம்...!
சினிமா செய்திகள்

ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் 'லவ் டுடே' திரைப்படம்...!

தினத்தந்தி
|
27 Nov 2022 9:27 AM GMT

‘லவ் டுடே’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 2-ம் தேதி லவ் டுடே திரைப்படம் ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்