காதலில் நாடகத்தன்மை கூடாது: நடிகை ரகுல் பிரீத் சிங் அறிவுரை..!
|காதல் அறிவுரை சொல்லும் வகையில் நடிகை ரகுல்பிரீத் சிங் கருத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை,
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் கைவசம் தற்போது இந்தியன் 2, அயலான் ஆகிய படங்கள் உள்ளன. இந்தி, தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில் காதல் அறிவுரை சொல்லும் வகையில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "காதலில் நாடகத்தன்மை எதுவும் காதல் ஜோடிகளுக்கு இருக்கவே கூடாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வது முக்கியம். எத்தகையை நிபந்தனையும் விதிக்காமல் ஒருவரின் விருப்பத்துக்கு மற்றவர் இடையூறு செய்யாமல் கவுரவிக்க வேண்டும்.
எந்த விஷயத்திலும் பலவந்தமாக தங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்க கூடாது. இதுதான் உண்மையான காதலுக்கு அடையாளமாக இருக்கும். பொதுவாக பரிபூரணமான மனிதர்களாக இருப்பவர்களால் மட்டுமே மற்றவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொண்டு வர முடியும். எந்தவித ஈகோவும் இல்லாமல் வளர்ச்சியை முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதுதான் உண்மையான காதல்'' என்றார்.
ரகுல் பிரீத் சிங் இந்தி தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார். ஆனாலும் திருமணம் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், சிறிது காலம் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.