< Back
சினிமா செய்திகள்
வினியோகஸ்தருக்கு நஷ்டம்: கங்கனா படத்துக்கு எதிராக வழக்கு
சினிமா செய்திகள்

வினியோகஸ்தருக்கு நஷ்டம்: கங்கனா படத்துக்கு எதிராக வழக்கு

தினத்தந்தி
|
23 March 2023 8:31 AM IST

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாரான 'தலைவி' படம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. விஜய் இயக்கி இருந்தார்.

இந்த படத்தை உலகளாவிய அளவில் வெளியிட உரிமை பெற்று இருந்த வினியோக நிறுவனம் படம் எதிர்பார்த்த வசூல் ஈட்டாததால் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. எனவே பட தயாரிப்பு நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கிய ரூ.6 கோடியை திருப்பி தருமாறு கேட்டு வினியோகஸ்தர் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளருக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி கொடுக்காததால் வினியோகஸ்தர் தரப்பில் ரூ.6 கோடியை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்