< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க' - வைரமுத்துவின் பதிவு வைரல்
|15 May 2024 11:29 AM IST
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் 'பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க' என்று தெரிவித்துள்ளார்
சென்னை,
1980-ம் ஆண்டில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்த வைரமுத்து, 'இது ஒரு பொன் மாலைப் பொழுது...' என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் தமிழை பட்டை தீட்டத் தொடங்கினார். 43 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையில் கோலோச்சும் வைரமுத்து, 7 முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,
'பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க. மன்றில் இழித்தாரும் வாழ்க, வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டிச் சுழித்தாரும் வாழ்க. என்னைச் சுற்றிய வெற்றி வாய்ப்பைக் கழித்தாரும் வாழ்க. நானோ காலம்போல் கடந்து செல்வேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.