லோகேஷ் கனகராஜ் படத்தில் மன்சூர் அலிகான்
|நடிகர் மன்சூர் அலிகானுடன் விரைவில் இணைய உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து மன்சூர் அலிகான் நடிக்க இருக்கிறார்.
தன்னுடைய ஒரு படத்தில் மன்சூர் அலிகான் நிச்சயம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருந்தார். 'கைதி' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மன்சூர் அலிகானிடம்தான் பேசப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. தற்போது அது கைகூட உள்ளது.
பொதுவாகவே தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து வடிவமைத்து வரும் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகானை எப்படி பயன்படுத்தப் போகிறார்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.