< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இரண்டாவது படம் : ஹீரோவாக ராகவா லாரன்ஸ்
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இரண்டாவது படம் : ஹீரோவாக ராகவா லாரன்ஸ்

தினத்தந்தி
|
14 April 2024 3:01 PM IST

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

அதன் பின்னர், லோகேஷ் 'பைட் கிளப்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்தார். சமீபத்தில் சுருதி ஹாசனுடன் இணைந்து 'இனிமேல்' என்ற ஆல்பம் பாடலில் லோகேஷ் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இவர் தயாரிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ரெமோ, சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு 'பென்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்