தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்.... 'பைட் கிளப்' படத்தின் 'டீசர் வெளியானது...!
|'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சென்னை,
மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.இந்த நிலையில் 'ஜி ஸ்குவாட்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் தொடங்கியுள்ளார். இதுகுறித்து கூறும்போது, நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் முதல் சில தயாரிப்புகள் அமையும் என்று தெரிவித்திருந்தார்.இதற்கிடையே 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். அந்த படத்திற்கு 'பைட் கிளப்' (Fight Club) என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கிய இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . இந்த நிலையில் 'பைட் கிளப்' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 'பைட் கிளப்' படத்தின் டீசர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Here's the #FightClubTeaser guyshttps://t.co/nFJ99hsDhr@Vijay_B_Kumar @reelgood_adi @Abbas_A_Rahmath @GSquadOffl @reel_good_films @mytrimonisha @SonyMusicSouth #GovindVasantha pic.twitter.com/Ai6HsxYMkh
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 2, 2023