< Back
சினிமா செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!
சினிமா செய்திகள்

ஆர்.ஜே.பாலாஜி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

தினத்தந்தி
|
12 Nov 2022 8:00 PM IST

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

சென்னை,

'எல்.கே.ஜி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி, தொடர்ந்து 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். மேலும் இணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தில் வெளியிட்டார்.

இந்த படத்திற்கு 'சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்