< Back
சினிமா செய்திகள்
Lokesh Kanagaraj, Atlee congratulated the team of The goat
சினிமா செய்திகள்

'தி கோட்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ், அட்லீ

தினத்தந்தி
|
4 Sept 2024 7:28 PM IST

தி கோட் படக்குழுவுக்கு இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். விஜ்ய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் அவரது நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். தி கோட் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் கடைசி அப்டேட்டை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மேலும், இப்படத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தி கோட் படக்குழுவுக்கு இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்