லோகேஷ் படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சய் தத்தை தொடர்ந்து நாகார்ஜுனாவுமா?
|நாகார்ஜுனா தற்போது "குபேரா" படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறார்.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'கூலி'. சமீபத்தில் இப்படத்தின் பெயர் மற்றும் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இந்த படத்திலிருந்து தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நாகார்ஜுனாவை லோகேஷ் அணுகியதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி (மாஸ்டர்) மற்றும் சஞ்சய் தத் (லியோ) போன்ற நடிகர்களை நெகட்டிவ் ரோல்களில் வெற்றிகரமாக நடிக்க வைத்ததால், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நாகார்ஜுனா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாகார்ஜுனா இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக தெரிகிறது.
நாகார்ஜுனா தற்போது சேகர் கம்முலா இயக்கும் "குபேரா" படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவரது 'நா சாமி ரங்கா' இயக்குனரான விஜய் பின்னி இயக்கும் மற்றொரு படத்திலும் அவர் பணிபுரிந்து வருகிறார்.