< Back
சினிமா செய்திகள்
சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா
சினிமா செய்திகள்

சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

தினத்தந்தி
|
9 July 2024 7:25 PM IST

எக்ஸ் தளத்தில் டாக்டர் ஒருவர் சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய தகவலை பதிவிட்டுள்ளார், அதற்கு சமந்தா தகுந்த பதிலளித்துள்ளார்.

சென்னை,

நடிகை சமந்தா மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலமாக அவர் எடுத்து வரும் சிகிச்சை மற்றும் மருத்துவம் பற்றி பாட்காஸ்ட் மூலம் பகிர்ந்து வருகிறார். இது ,'என்னைபோல் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் என்பதற்காக எனக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்த விஷயங்களை தன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

சமூக ஊடகங்களில் தி லிவர் டாக் என்று அழைக்கப்படும் ஹெபடாலஜிஸ்ட்-மெடிக்கல் இன்ப்ளூயன்ஸர் ஒருவர் நடிகை சமந்தா குறித்த பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, சமந்தா தனது போட்காஸ்ட் டேக் 20-ல் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீரை வைரஸ் தொற்றுக்கு மாற்று சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என பதிவிட்டதற்கு, டாக்டர் சமந்தாவை "உடல்நலம் மற்றும் அறிவியல் படிப்பறிவற்றவர்" என்று பதிவிட்டுள்ளார், "பகுத்தறிவு மற்றும் முற்போக்கான சமூகத்தில்" இதுபோன்ற கூற்றுக்களை செய்ததற்காக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "சமந்தாவின் உடல்நிலையை நான் புரிந்துகொண்டு அனுதாபப்படுகிறேன், செய்தி தெரிவிக்கப்பட்ட விதத்தில் சங்கடமாகவோ அல்லது மோசமாகவோ உணர்ந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், தவறான மருத்துவ தகவலை மாற்றி சரியான தகவலை தருவதே எனது நோக்கம்" என்று டாக்டர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக "நிறைய சோதனை மற்றும் பிழைகளுக்குப் பிறகு தனக்கு அற்புதமாக சிகிச்சைகள் கிடைத்ததாக விளக்கினார். டி.ஆர்.டி.ஒ.வில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் இந்த சிகிச்சை எனக்கு பரிந்துரைக்கப்பட்டது. வழக்கமான மருத்துவமாக இல்லாமல் மாற்று சிகிச்சை பரிந்துரையை தேர்ந்தெடுத்ததாக கூறினார். இருப்பினும், நான் மருத்துவ ஆலோசனைகள் குறித்து அதிக கவனமாக இருப்பேன்" என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்