< Back
சினிமா செய்திகள்
கல்லீரல் பாதிப்பு: நடிகர் பாலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது
சினிமா செய்திகள்

கல்லீரல் பாதிப்பு: நடிகர் பாலாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது

தினத்தந்தி
|
8 April 2023 7:27 AM IST

தமிழில் அன்பு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து அம்மா அப்பா செல்லம், காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தார். வீரம் படத்தில் அஜித்குமார் தம்பியாக வந்தார். ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து இருந்தார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல டைரக்டர் சிறுத்தை சிவாவின் சகோதரர்.

பாலாவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து பாலா வீடியோவில் "எனக்கு பெரிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இந்த அறுவை சிகிச்சையின்போது எனக்கு மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பிரார்த்தனையால் உயிர் பிழைக்கவும் வாய்ப்பு உள்ளது'' என்று உருக்கமாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தகவலை ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்