நிவேதா தாமசின் சின்னச்சின்ன ஆசைகள்
|தமிழில் ரஜினியுடன் தர்பார், கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் தனது ஆசைகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு நிறைய சின்னச் சின்ன ஆசைகள் உள்ளன. மழையில் நனைய பிடிக்கும். குழந்தைகள் சேர்ந்து கும்பல் கும்பலாக விளையாடும்போது அவர்களோடு சேர்ந்து விளையாட ஆசை. ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு கொட்டும் மழையை ரசித்தபடி கையில் காபி வைத்து குடிக்க பிடிக்கும். ஆண்களைப்போல் அடிக்கடி சென்னை தெருக்களில் புல்லட் மீது ஏறி பெருமையாக ஓட்டுவேன். ஹெல்மெட் அணிவதால் என்னை யாரும் அடையாளம் காண்பதில்லை.
சாலை விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இசை என்றால் மிகவும் பிடிக்கும். மனதுக்கு நெருக்கடியாக இருந்தால் நல்ல இசையை கேட்பேன். ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் எனக்கு உயிர். ரோஜா, தில்சே, ரங்கீலா இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு விதமான இசையை அவர் கொடுத்திருக்கிறார். நான் கூட அடிக்கடி வீட்டில் பாடிக்கொண்டே இருப்பேன்" என்றார்.