இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள தென்னிந்திய படங்களின் பட்டியல்
|இந்தமாதம் ( செப்டம்பர்) வெளியாக உள்ள தென்னிந்திய படங்கள்
சென்னை,
சினிமா ரசிகர்களுக்கு இந்த மாதம் மிகச்சிறந்த மாதமாக அமைந்துள்ளது. விஜய்யின் தி கோட், ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்பட பல படங்கள் இம்மாதம் வெளியாக உள்ளன. அதன்படி, இந்தமாதம் ( செப்டம்பர்) வெளியாக உள்ள தென்னிந்திய படங்களை தற்போது காணலாம்.
1. 'இப்பானி தப்பிடா இலியாலி'
விஹான் கவுடா, அங்கிதா அமர், கிரிஜா ஷெட்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இப்பானி தப்பிடா இலியாலி. சந்திரஜித் பெல்லியப்பா இயக்கிய இப்படம் வரும் 6-ம் தேதி கர்நாடகா முழுவதும் இருக்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2. '35-சின்ன கதை காடு'
நிவேதா தாமஸ் நடித்துள்ள படம் '35 சின்ன கதை காடு'. இப்படம் கடந்த சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் பல படங்கள் வெளியான காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதனைத்தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
3. 'கொண்டல்'
மலையாள சினிமாவில் வரவிருக்கும் படமாக கொண்டல் உள்ளது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், ராஜ் பி ஷெட்டி மற்றும் ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
4. 'கார்க்கி நானு பிஏ, எல்எல்பி'
ஜெய் பிரகாஷ் ரெட்டி, மீனாட்சி தினேஷ், சாது கோகிலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள கன்னட படம் கார்க்கி நானு பிஏ, எல்எல்பி. பவித்ரன் இயக்கியுள்ள இப்படம் வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
5. 'ஏ.ஆர்.எம்'
ஜித்தின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஏ.ஆர்.எம். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஓனம் பண்டிகையை முன்னிட்டு வரும் 12-ம் தேதி தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.
6. 'ஹிட்லர்'
தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7. 'பேட்ட ராப்'
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8. 'மெய்யழகன்'
பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'மெய்யழகன்'. சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
9. 'தேவரா'
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படமாக உருவாகி வரும் 'தேவரா பாகம்-1' படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
10. 'தி கோட்'
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.