சம்பளத்தின் மூலமாக அதிக சொத்து சேர்த்த நடிகைகள் பட்டியல்
|ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த ஆசிய நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதில் சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகை முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாது, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவரே முன்னிலையில் உள்ளார். இவரது சம்பளம் 20 மில்லியன் டாலர். கடந்த 2018-ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக 3 மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக, 3 மற்றும் 4-வது இடங்களில் முறையே பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் உள்ளார்கள். இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.