வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போன்றது - நடிகை மீனா
|நடிகை மீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்க்கை என்றால் ரோலர் கோஸ்டர் மாதிரி என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்தார். பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.
கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டுவர தொடங்கி இருக்கிறார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசி வருகிறார்.
சமீபத்தில் மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதற்கிடையில் அவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தனது இளம் வயது புகைப்படங்களை பதிவிட்டு அதனுடன், 'வாழ்க்கை ரோலர் கோஸ்டர் போன்றது. அதை வாழுங்கள். இந்த நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது', என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனாவின் இந்த உருக்கமான பதிவை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். திரை பிரபலங்களும் நம்பிக்கையான வார்த்தைகளை பதிவிட்டு வருகிறார்கள்.