< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'உலகளாவிய அன்பை செழிக்கச் செய்ய காதலர் தினத்தைக் கொண்டாடுவோம்' - கமல்ஹாசன் ட்வீட்
|14 Feb 2023 5:11 PM IST
சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர காதலர் தினத்தைக் கொண்டாடுவோம் என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந்தேதி 'காதலர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் காதல் ஜோடிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசுகளை பரிமாறிக்கொண்டும், தங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு பயணம் செய்தும் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்."
இவ்வாறு கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.