< Back
சினிமா செய்திகள்
இந்த கடல்ல ரத்தமும் கத்தியும் கொட்டி கிடக்கு- வைரலாகும் தேவரா வீடியோ
சினிமா செய்திகள்

இந்த கடல்ல ரத்தமும் கத்தியும் கொட்டி கிடக்கு- வைரலாகும் தேவரா வீடியோ

தினத்தந்தி
|
9 Jan 2024 12:10 AM IST

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் ’தேவரா’. ’தேவரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் 'தேவரா'. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் 'தேவரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தேவரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், 'இந்த கடல்ல மீன விட அதிகமா ரத்தமும் கத்தியும் கொட்டி கிடக்கு. அதுனால் தான் இதுக்கு பெயரு செங்கடல்' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதனால் வைபான ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்