< Back
சினிமா செய்திகள்
காம்போ பேக்காக ரூ.450-க்கு விற்பனை செய்யப்படும் லியோ டிக்கெட் - ரசிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி
சினிமா செய்திகள்

காம்போ பேக்காக ரூ.450-க்கு விற்பனை செய்யப்படும் 'லியோ' டிக்கெட் - ரசிகர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
15 Oct 2023 8:33 PM IST

கோவை கே.ஜி.சினிமாஸ் திரையரங்கில் காம்போ பேக்காக ரூ.450-க்கு 'லியோ' டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

கோவை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 'லியோ' படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவையில் உள்ள பிரபல திரையரங்கான கே.ஜி.சினிமாஸ் திரையரங்கில் 'லியோ' படத்தின் பால்கனி டிக்கெட்டுக்காக ரூ.192 வசூலிக்கப்படும் போது அதனுடன் காம்போ பேக்காக ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டி எல்லாம் சேர்த்து ரூ.450 வரை வசூலிக்கப்படுகிறது.

இந்த காம்போ பேக்கில் டிக்கெட் வாங்குபவர்கள் டிக்கெட் எடுக்கும் போது பாப்கான், குளிர்பானம் போன்றவற்றையும் உடனடியாக சேர்த்து பதிவு செய்து வாங்கி செல்ல வேண்டும் என்று திரையரங்க ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், காம்போ பேக் இல்லாமல் வெறும் ரூ.192 கொண்ட பால்கனி டிக்கெட் கொடுக்க ஊழியர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்