< Back
சினிமா செய்திகள்
வசூலில் சாதனை படைக்கும் லியோ...!
சினிமா செய்திகள்

வசூலில் சாதனை படைக்கும் லியோ...!

தினத்தந்தி
|
8 Nov 2023 9:53 PM IST

லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. மேலும் இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'லியோ' படத்தின் வெற்றி விழா கடந்த நவம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்து பேசினர். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் பேசுபொருளானது.

இந்நிலையில், லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாக லியோ வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது ,

மேலும் செய்திகள்