< Back
சினிமா செய்திகள்
புற்றுநோயுடன் தீவிர போராட்டம்... பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்...!

Image Credits : ANI News

சினிமா செய்திகள்

புற்றுநோயுடன் தீவிர போராட்டம்... பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்...!

தினத்தந்தி
|
8 Dec 2023 2:23 AM GMT

பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார்.

மும்பை,

புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் (வயது 67) நேற்று இரவு மும்பையில் காலமானார். இவர் பழம்பெரும் இந்தி காமெடி நடிகர் மெஹமூத் அலியின் மகன். இவரின் இயற்பெயர் நயீம் சயீத். சினிமா ரசிகர்கள் இவரை 'ஜூனியர் மெஹமூத்' என்று தந்தையின் பெயரால் அழைத்தனர்.

இவர் கடந்த 1967ம் ஆண்டு வெளியான 'நவுனிகல்' என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதுவரை 265 திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 6 மராத்தி மொழி திரைப்படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார்.

கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ ஆவூர் தோ பாஞ்ச் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இந்தி, மராத்தி, பஞ்சாபி உட்பட 7 மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவர் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவர் புற்றுநோயின் 4ம் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அவருக்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

மேலும் செய்திகள்